திரளான பக்தர்கள் தரிசனம்
செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஏப்.14- பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிகழ்ச்சியான தேரோட்டம் கம்மவார் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மூப்பன்பட்டி மாடசாமி குடும்பத்தினர் தேர் தடி போட்டனர்.
திரளான பக்தர்கள், செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வந்தது. காலை 10 மணிக்கு தேர் நிலையத்தை வந்தடைந்தது.
தேரோட்டத்தில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கம்மவார் சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் வேல்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
தீர்த்தவாரி- தெப்ப திருவிழா
திங்கட்கிழமை ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.
No comments:
Post a Comment