செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவில்பட்டி
செண்பகவல்லி அம்மன்-பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த
4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையும்,
மாலையும் சுவாமி-அம்பாள் வீதி உலாவும், சிறப்பு தீபாராதனையும்
நடந்தது. விழாவின் 8ம் திருநாளான நேற்று மாலை கம்மவார் சங்கம் சார்பில்
37-வது ஆண்டு தேர்த்திருவிழா நடந்தது.
இதையொட்டி
காலை 4 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும்
நடந்தது. மாலை 5 மணிக்கு ரதா ரோகண பூஜையும் நடந்தது. கம்மவார் சங்க தலைவர்
ஆர்.வி.எஸ்.துரைராஜ் தலைமையில், எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, துணை போலீஸ்
சூப்பிரண்டு சிலம்பரசன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சனம், உதவி
ஆணையாளர் வீரராஜன், கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் ஆகியோர் வடம்
பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
மூப்பன்பட்டி
பொன்னுச்சாமி தலைமையில் தேர்த்தடி முறையதாரர்கள் தேர்த்தடி போட்டனர்.
முதல் தேரில் பூவனநாதசுவாமி பிரியாவிடையுடன் பவனி வந்தார். 2-வது தேரில்
செண்பகவல்லி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். தேர் நான்கு ரத
வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
No comments:
Post a Comment