அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (ஏப்.5) கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது.இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் 9-ம் திருநாளான ஏப்.13-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். 10-ம் திருநாளான திங்கள்கிழமை(ஏப்.14) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 11-ம் திருநாளான செவ்வாய்க்கிழமை(ஏப்.15) தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, கோயில் பின்புறம் உள்ள மைதானத்தில் ராட்டினங்கள் உள்பட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி . கோ வி ல் ப ட்டி இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ள...
-
செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் ச...
-
இந்து மதம் கூறும் மேன்மை மிக்க விரதங்களில் மஹா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். பரம்பொருளாகிய ச...
-
ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவர்கள். காரணம் ஆண்,பெண் வேறுபாடு இன்றி படித்தோர் , படிக்காதவர் என்று பாகுபாடு இன்றி...
-
முகவரி: http://www.devarathirumurai.wordpress.com தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவ...
Example
!doctype>
No comments:
Post a Comment