செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Thursday, April 5, 2018

பங்குனிப் பெருந் திருவிழா கொடியேற்றம்



பங்குனித் திருவிழா இன்று (05.04.18) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 13-ம் தேதி, தேரோட்டம் நடைபெறும்.




கோவில்பட்டியில், செண்பகவல்லி அம்பாள் அரசாட்சி செய்துவருகிறாள். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற இக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில், பங்குனிப் பெருந் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு பங்குனித்திருவிழா, இன்று (05.04.18) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. திருவனந்தல் பூஜை, கணபதி பூஜை, யாக பூஜைகளும், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து, கொடிப்பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமி சந்நிதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. பிறகு, கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரதீபாராதனை நடைபெற்றது. இன்று துவங்கிய திருவிழா, 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நாள்களில், தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 13-ம் தேதி காலை நடைபெற உள்ளது. 14-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 15-ம் தேதி தெப்ப உற்சவத் திருவிழாவும் நடைபெறும்.


Wednesday, April 4, 2018

பங்குனி பெருந்திருவிழா





Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!