ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ராஜகோபுர திருப்பணி முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் ஸ்ரீ பூவனநாத சுவாமி சன்னதி முன் 97 அடி உயர ராஜகோபுரம் அமைக்கும் பணி 1999-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இக் கோயிலில் மூலவர் பூவனநாத சுவாமி, அருள்மிகு செண்பகவல்லி அம்பாள், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி ஆகிய 6 விமான கலசங்களையும், அம்பாள் சன்னதி முகப்பு சாலகார கோபுரப் பணியும் புதுப்பித்து, உபயதாரர்கள் மூலம் திருப்பணி செய்ய வேண்டியுள்ளதால், 6 விமான கலசங்கள் மற்றும் அம்பாள் சன்னதி சாலகார கோபுரத்தினையும், பாலாலயம் செய்யும் வைபவம் புதன்கிழமை மாலை சுமார் 5 மணிக்கு மேல் நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பாலாலயம் செய்யும் வைபவம் பரசுராம பட்டர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி இளையராஜா, கோவில்பட்டி டி.எஸ்.பி. மீனா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, திருப்பணிக் குழுத் தலைவர் நாகஜோதி, அறங்காவலர் திருப்பதிராஜா, திருப்பணிக் குழு கமிட்டி உறுப்பினர்கள் திலகராஜ் ஆறுமுகச்சாமி, ஜெயராமன், கருப்பசாமி, மாரியப்பன், கம்மவார் சங்கத் தலைவர் துரைராஜ், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், கோயில் ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி . கோ வி ல் ப ட்டி இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ள...
-
ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் 26.01.2015 திங்கள்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹ...
-
நடராஜர் என்பவர், எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரண...
-
செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கோவில்பட்டி செண...
-
கோயில் என்பது மிகவும் புனிதமான இடம். ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் ...
Example
!doctype>
No comments:
Post a Comment