காந்தி மைதானத்தில் ரூ. 25 லட்சம் செலவில் தளம் அமைக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இம்மாதம் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதற்கு ரூ. 60 லட்சம் செலவில் மதிப்பீடு செய்யப்பட்டு, கும்பாபிஷேகத்துக்கான பணியும் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, பூவனநாத சுவாமி சன்னிதி முன்புறம் உள்ள காலியிடத்தில் யாகசாலை பூஜைக்காக 70 அடி நீளம், 50 அடி அகலத்தில் யாகசாலை பூஜை நடைபெறும் இடம் அமைக்கப்பட்டு, அதில் 3 நவகுண்டங்கள், 3 ஏக குண்டங்கள், 3 பஞ்சகுண்டங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகப் பணிகளை கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ, நகராட்சித் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர் ஆகியோர் ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக செய்யவேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசித்தனர். கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் நாகஜோதி, கோயில் நிர்வாக அலுவலர் கசன்காத்தபெருமாள், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம், நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிச்செல்வம், மருத்துவர்கள் சம்பத், கமலாமாரியம்மாள், அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment