மனம் போல் மாங்கல்ய பாக்கியமும், பேர் சொல்ல பிள்ளை வரமும் பெற்றுத் தரும் திருநாள்தான் ஆடிப்பூரம். புனிதமான இந்த தினத்தில் தான்
அம்பிகை பூப்பெய்தினாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
அன்றைய தினம் அவளுக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தருது சாந்தியும் செய்வார்கள்.
அன்றைய தினம் அவளுக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தருது சாந்தியும் செய்வார்கள்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி
கோயிலில் நேற்று ஆடிப்பூர வளை காப்பு விழா நடந்தது. இதை யொட்டி காலை 5
மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 7
மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபா ராதனை
நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு வளைகாப்பு விழா
நடந்தது. அம்மனுக்கு பாசிப்பயறு கட்டி, கர்ப்பிணி கோலத்தில் சிறப்பு
தரிசனமும், இதில் அம்பாளுக்கு பாசிப்பயறு படையல் வைக்கப்பட்டு வண்ணமிகு
வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபா ராதனை நடந்தது.
சுவாமிநாதபட்டர், செண்பகராமபட்டர், கோபாலகிருஷ்ணபட்டர், சங்கர்பட்டர் பூஜை
களை நடத்தினர். விழாவில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை
சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்பாளை
வழிபட்டனர். மேலும் விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு,
குங்குமம், சர்க்கரை பொங்கல், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோயில் தர்க்கார் செல்லத்துரை, கோயில் செயல்அலுவலர் கசன்காத்தபெரு மாள், தலைமை எழுத்தர் ராமலிங்கம், எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், தொழிலதிபர் திலகராஜ் ஆறுமுகச்சாமி, ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.