இங்கே இடம் பிடித்தால் அங்கே இடம் உண்டு
என்று சொல்லுவர்கள் அது என்னனு தெரியுமா!
இங்கே இடம் பிடித்தால் என்றால் தேர் வடம் பிடிப்பதில் இடம் பிடித்தல் என்றும் , அங்கே இடம் உண்டு என்றால் கைலாயத்தில் இடம் உண்டு என்றும் சொல்லி வைத்தார்கள் ஆகையால் நாம் அனைவரும் ஓன்று கூடி வடம் பிடித்து தேர் இழுப்போம் மறுபிறவி இல்லாத பலனை அடைவோம். வாருங்கள்........
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா
38-வது ஆண்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது
கோவில்பட்டி
செண்பகவல்லி அம்மன்-பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா வருகிற பங்குனி 23-ம் (05.04.2013) தேதி
காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது விழா நாட்களில் தினமும் காலையும்,
மாலையும் சுவாமி-அம்பாள் வீதி உலாவும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். விழாவின் 8ம் திருநாளான வருகிற பங்குனி மாதம் 31ம் (13.04.2013) தேதி சனிக்கிழமை
காலை 7 மணிக்கு 38-வது ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறும்.
இந்த வருடம் தனி சிறப்பாக 37 ஆண்டுகள் மாலையில் நடந்த தேர் திருவிழா இந்த ஆண்டு காலையில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment