தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும்
63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது. இன்னும் நிறைய உள்ளன , சென்று உலாவுங்களேன். நன்றி
செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."
Tuesday, September 18, 2012
Wednesday, September 12, 2012
தீபம் ஏற்றும் முறையும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும்
2வது வடக்கு நோக்கி ஒரு திரியும்
3வது மேற்கு நோக்கிஇரு திரியும் ஏற்ற வேண்டும்.தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.
குளிர்விக்கும் போது,
முதலில் மேற்கே உள்ள திரிகளையும்
2வது வடக்கே உள்ள திரியையும்
3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.ஊதி அணைக்கக் கூடாது.அப்படி அணைப்பது சாவுச் சடங்கிற்குச் சமமானது.(நாம் பிறந்த நாள் விழாக்களில் என்ன செய்கிறோம்? என்பதை இப்போது நினைவு கூரவும்.அது மிகவும் தவறான அணுகுமுறை)
மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள
வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும்.
எனது அனுபவத்தில் பிரிந்தவர்கள்- ஒரு போதும் சேரவே வாய்ப்பு இல்லை என நம்பியிருந்தேன்.அவர்கள் இந்த பரிகாரத்தால் ஒன்றிணைந்தனர்.ஆமாம்!!!பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்தனர்.
தீபம் ஏற்றுங்கள்!!! வளமுடன் வாழுங்கள்!!!
Tuesday, September 4, 2012
சங்கடங்கள் நீக்கிடும் சங்கடஹர சதுர்த்தி விரதம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள்
இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள்
அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு
கடந்த ஆனந்தத்தை அடையலாம்.
சகல சௌபாக்கியங்களையும்
பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம்
இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும்
வெற்றியடையும். 'ஹர' என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு
மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி
ஆகும்.
அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி
ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை
கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர
சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை 'மகா சங்கடஹர சதுர்த்தி'
என்று அழைக்கின்றனர்.
விரதத்தின் பலன்கள்:
இவ்விரதத்தை
கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில்
தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய
முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள்,
நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
சனி
தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம்
பெரும்பகுதி குறையும். சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம்
அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க
வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும்
அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.
அன்றைய
தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும்
முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.
சங்கடஹர
சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, 'ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர
துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்' எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும்,
தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல்
பலன் உண்டு.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி . கோ வி ல் ப ட்டி இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ள...
-
செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் ச...
-
இந்து மதம் கூறும் மேன்மை மிக்க விரதங்களில் மஹா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். பரம்பொருளாகிய ச...
-
ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவர்கள். காரணம் ஆண்,பெண் வேறுபாடு இன்றி படித்தோர் , படிக்காதவர் என்று பாகுபாடு இன்றி...
-
முகவரி: http://www.devarathirumurai.wordpress.com தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவ...
Example
!doctype>