செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Tuesday, April 4, 2017

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் பெருந்திருவிழா

நிகழும் மங்களகரமான 1192ம் ஆண்டு பங்குனி மாதம் 23ம் தேதி புதன்கிழமை (ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்
காலை 6.00 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் 9-ம் திருநாளான வியாழக்கிழமை ஏப்.13-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். 10-ம் திருநாளான வெள்ளிகிழமை(ஏப்.14) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 11-ம் திருநாளான சனிக்கிழமை(ஏப்.15) மாலை தெப்பத் திருவிழாவும் நடைபெறும். விழாவையொட்டி, கோயில் பின்புறம் உள்ள மைதானத்தில் ராட்டினங்கள் உள்பட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
பக்தகோடி பெரு மக்கள் தவறாது கலந்து கொண்டு சுவாமி அம்மாளின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பபடுகிறார்கள்

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!