செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."
Monday, November 7, 2011
Saturday, October 29, 2011
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 2011
செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி
கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக
நடந்தது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கொடியேற்றம் முதல் ஒவ்வொரு நாளும் புஷ்ப சப்பரம், பல்லக்கு, காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், கிளிவாகனம் ஆகியவற்றில் சுவாமி அம்மன் பவனி வந்தனர். ஒன்பதாம் திருநாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடந்தது.
அதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் 18 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகமும் பூஜைகளும் நடத்தப்பட்டு காலை 7.15 மணிக்கு ரதாரோகணம் என்ற அம்மன் திருத்தேருக்கும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் ஆர்டிஓ ரவிச்சந்திரன் மற்றும் தாசில்தார் கந்தசாமி ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து தேர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையில் நின்றது.

Subscribe to:
Comments (Atom)
Popular Posts
-
செண்பகவல்லி அம்மன் கோயிலில் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, அப்பணிகளை கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ, நகரா...
-
செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் ச...
-
கோயில் என்பது மிகவும் புனிதமான இடம். ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் ...
-
நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு மன்மத வருடம் தை மாதம் 2ம் தேதி 16.01.2016 சனிக்கிழமை சப்தமி த...
-
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நாளை (05.04.2016) காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடி...
Example
!doctype>