இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கோவில்மேடு என்னும் இடத்தில் காந்தி மைதானத்திற்கு பின்புரத்தில் உள்ளது. இந்த கோவிலை செண்பகராஜா என்னும் அரசர் கட்டியுள்ளார். இது மிகவும் (1000 ஆண்டுகள்) பழமைவாய்ந்த கோவிலாகும்.
இந்த கோவிலில் இருக்கும் சிவனின் பெயர் பூவனநாதசுவாமி. இங்கிருக்கும் அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் ஏழு அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றததுடன் காட்சி தருகிறாள். அம்மானுக்கும் சிவனுக்கும் தனித்தனி பிரகாரங்கள் உள்ளது. இங்கிருக்கம் அம்மனுக்கு சக்தி அதிகம். அம்மனின் அருளால் அங்கு எல்லோருமே சுபிக்ஷமாக இருக்கிறார்கள். இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு, நவராத்திரி, வருஷப்பிறப்பு போன்ற விசேஷங்கள் விமர்சையாக கொண்டாடப்படும். அதுமட்டுமில்லாது, மார்கழி மாதம் முழுவதுமே அம்பாளுக்கு விசேஷமாக கொண்டாடப்படும்.
தல வரலாறு:
ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன்செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை நோக்கிப் பயணமானார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகியேரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்தி²ம் நீங்கப்பெற்றார். பொன்மலை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். வெள்ளிமலை சிவக்குழவைச் சார்ந்த வாமனன் நந்திதேவரின் சாபத்தால் வெம்பக்கோட்டையில் வேந்தனாகப் பிÓந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் பூவனாதருக்கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் ( ஒளி நூற் புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
மேலும் இத்திருக்கோவிலில் தற்போது ராஜகோபுர பணிகள் நிறைவடைந்து ஜனவரி 29 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது
தல சிறப்பு:
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் பின்புற தோற்றம்
க.கணபதி
கோவில்பட்டி
கோவில்பட்டி